Menu
Your Cart

காலச்சுவடு பதிப்பகம்

எட்டயபுரம்
-4 %
இக் குறுங்காவியத்தின் மூலம் கலாப்ரியாவின் கவித்துவ ஆளுமை, காட்சிப் படிமங்களை அமைக்கும் திறன், வாழ்வின் மீதான பார்வை, அனுபவ வெளிப்பாட்டின் அடிப்படைக் குறியீடான மொழியை ஆற்றலுடன் கையாளும் லாவகம் ஆகியவற்றைத் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம். - ராஜமார்த்தாண்டன்..
₹86 ₹90
எண்ணங்கள் அனுபவங்கள்
-5 %
தமிழின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவரான வண்ணநிலவனின் கட்டுரைகள், நேர்காணல்கள் ஆகியவற்றின் தொகுப்பு இது. தன்னுடைய சமகால எழுத்தாளர்கள் பற்றியும் இலக்கியச் சூழல் குறித்தும் வண்ணநிலவனின் கறாரான, தெளிவான மதிப்பீடுகளை இந்தக் கட்டுரைகளில் காணலாம். அரசியல், திரைப்படங்கள், இதழியல் ஆகியவை குறித்தும் தீர்க்..
₹247 ₹260
எதிர் சினிமா
-5 %
திரைப்படங்களைப் பற்றிய அறிமுகமாகவும் ஆய்வாகவும் எழுதப்பட்டுள்ள ரதனின் இந்த நூல் பிற சினிமா கட்டுரைத் தொகுப்புகளிருந்து வேறுபட்டது. சினிமாவின் அழகியலையோ தொழில்நுட்பத்தையோ வியந்து பேசும் நூல் அல்ல என்பதே அந்த வேற்றுமை. காட்சிகளின் எதிர் கோணத்தில் உண்மைகளைத் தேடுகிறது இந்த நூல். நவீன யுகத்தின் மான..
₹114 ₹120
எதிர்ப்புக் குரல்கள்
-5 %
இந்திய நாகரிகம் பற்றிப் பேசும்போதெல்லாம், அகிம்சாவாதிகளான, சகிப்புத்தன்மையுடைய, உயர்ந்த லட்சியங்களுக்காகவே வாழ்ந்த மக்களைக் கொண்ட சமூகம் என்ற சித்திரமே முன்னிறுத்தப்படுகிறது; எதிர்ப்புக் குரல்கள் பற்றிய பேச்சே இருப்பதில்லை. ரொமிலா தாப்பர் இந்த நூலில், இந்திய வரலாற்றின் மூன்று காலகட்டங்களைச் சேர்ந்த ..
₹190 ₹200
எது கருத்து சுதந்திரம்
-5 %
இன்று உலகளவில் பொதுத்தளத்தில் விவாதத்திற்குரிய முக்கியமான விஷயமாகக் கருத்துரிமை முன்னிற்கிறது. நூல்களைத் தடை செய்வது, எரிப்பது, நூலாசிரியர்கள் மீது வன்முறையைப் பிரயோகிப்பது, கொலை செய்வது பரவலாக நடக்கிறது. அது மட்டுமல்ல, ஊடக வெளியில் தெரிவிக்கப்படும் எந்தக் கருத்தின்மீதும் உடனடியாக வன்மத்தையும் வக..
₹95 ₹100
எது நிற்கும்
-1 %
தமிழ்ச் சமூகத்திடமிருந்து அங்கீகாரமோ ஊக்கமோ கிடைக்காத போதும் பெரும் உத்வேகத்துடனும் படைப்பூக்கத்துடனும் செயல்பட்ட முன்னோடிகளில் ஒருவர் கரிச்சான் குஞ்சு என்கிற ஆர். நாராயணசாமி. ‘பசித்த மானுடம்’ என்னும் நாவலுக்காகவே மிகுதியும் நினைவுகூரப்படும் கரிச்சான் குஞ்சு சிறுகதைகளிலும் குறிப்பிடத்தக்க பங்கள..
₹248 ₹250
எதை நினைந்தழுவதும் சாத்தியமில்லை
-5 %
காதல் கவிதைகளுடன் தொடங்கும் ஔவையின் இந்தத் தொகுதி கடந்துவிட்ட காலத்திற்கும் இனி கடக்கப்போகும் காலத்திற்கும் - வெறுமையும், அசைவும், இழப்பும், விழைவும் பின்னிப்பிணைந்துள்ள காலத்திற்கும் - இடையிலான காத்திருப்பைப் பேசுகிறது. போரின் அவலத்தையும், தாய்மையின் பரிவையும், சினத்தையும், ஆற்றாமையையும் இக்கவ..
₹76 ₹80
எந்தக் கங்கையில் இந்தக் கைகளைக் கழுவுவது?
-5 %
உள்ளடக்கத்தில் நேர்மையும், உருவத்தில் எளிமையும் விஜயேந்திரனின் அழகியல் எனலாம். தமிழ்த் தேசியத்தின் சுமையில் அவருடைய நேர்மை அமுங்கிப் போய்விடவில்லை. அநீதிக்கு எதிரான, நீதிக்கான, மனித விடுதலைக்கான, மனித மேன்மைக்கான குரலாக அவருடைய கவிதைகள் ஒலிக்கின்றன. இதில் சொல் விளையாட்டுக்கு இடம் இல்லை. வார்த்தைகளில..
₹276 ₹290
எந்தையும் நானும்
-5 %
புதுமைப்பித்தனின் ஒரே மகள் தினகரி. அவர் பிறந்த இரண்டு ஆண்டுகளில் புதுமைப்பித்தன் காலமாகி விட்டார். இதிலும் பெரும்பகுதிக் காலம் அவர் சென்னையிலும் பூனாவிலும் திரைக்கதை எழுதுவதில் செலவிடும் சூழல். காச நோயால் அவர் காலமானபொழுது தினகரிக்கு விவரம் தெரியாத வயது. யாருடைய ஆதரவுமின்றி கமலா விருத்தாசலம் தினகரிய..
₹95 ₹100
எனக்குக் கவிதை முகம்
-5 %
ஈழத் தமிழின் நவீன கவிதைக்குப் புதிய முகங்களைத் தருபவராக இருக்கிறார் அனார். அவருடைய கவிதைகளைத் திருப்பித் திருப்பிப் படிக்கிறபோது வேட்கையும் காதலும் மேலெழுகின்றன. தனிமையும் காத்திருப்பும் எரித்தாலும் ஊடல் சுடர்விடுகிறது; பதற்றமும் பீதியும் சூழ்கின்றன; திசைகள் குழம்பித் தத்தளிக்கின்றன . . . உள்ளடங்கி..
₹38 ₹40
எனது ஆண்கள்
-5 %
பாலியல் தொழிலாளியான நளினி ஜமீலா, அவரது தன் வரலாற்றின் மூலம் கேரளப் பண்பாட்டு உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். மலையாளிகளின் தனி வாழ்க்கையிலும் சமூக வாழ்க்கையிலும் நிலவும் கலாச்சாரப் பாசாங்கையும் போலி ஒழுக்கச் சார்பையும் அம்பலப்படுத்தினார். ‘எனது ஆண்கள்’ நளினியின் வரலாற்றில் மேலும் சில அத்தியாயங்களைப..
₹190 ₹200
Showing 253 to 264 of 1296 (108 Pages)